பாவூர்சத்திரத்தில் தைப்பூச விழாவில் சுவாமி சப்பர வீதி உலா

தைப்பூச விழாவில் சுவாமி சப்பர வீதி உலா;

Update: 2025-02-12 11:18 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று இரவு வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. கோவிலில் துவங்கிய முக்கிய வீதி வழியாக வீதி உலா மேல பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. இந்த வழியெங்கும் பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News