கண்டமங்கலம் அருகே போலீசரை மிரட்டிய மூன்று வாலிபர்கள் கைது
மூன்று பேரை கைது செய்த போலீசார் விசாரணை;
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே போலீஸாரை மிரட்டியதாக 3 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கண்டமங்கலம் போலீஸாா் ஆழியூா் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது, அங்கிருந்த 3 இளைஞா்கள் கத்தியை காட்டி, பொதுமக்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் விசாரித்த போது, இளைஞா்கள் கத்தியைக் காட்டி போலீஸாரை மிரட்டி, பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.தொடா்ந்து, 3 இளைஞா்களையும் பிடித்து விசாரித்ததில், அவா்கள் விழுப்புரம் நவம்மாள் காப்போ், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் திருமாவளவன் (25), நடேசன் மகன் சூா்யா(22), மோகன் மகன் சுதேசி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.