குமரி மாவட்டம் சாமிதோப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த தின விழா நேற்று மேற்குரத வீதியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் வழக்கறிஞர் என். பார்த்தசாரதி தலைமை தாங்கினார், சாமிதோப்பு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தி. மதிவாணன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏ. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமிதோப்பு கண்ணன் அறிவகம் குழந்தைகள் காப்பகத்திலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அங்கு மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.