மாந்திரீகம் மூலம் கொலை செய்ய திட்டம் தீட்டிய போலி சாமியார் கைது
பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா (40) என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த தனது எதிரி முரசொலிமாறனை செய்வினை செய்து மாந்தீரிகம் மூலம் வாகன விபத்திலோ அல்லது வேறு வகையிலோ உயிர் பிரிய வேண்டு என்று கூறி அவரிடம் சுமார் 21 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்;
மாந்திரீகம் மூலம் கொலை செய்ய திட்டம் தீட்டிய போலி சாமியார் கைது சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு(45), இவர் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகம் செய்யும் வேலை செய்து யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் பணம் பெற்று பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளார் இந்நிலையில் இவரது யூடியூப் சேனலில் வீடியோ பார்த்த பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா (40) என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த தனது எதிரி முரசொலிமாறனை செய்வினை செய்து மாந்தீரிகம் மூலம் வாகன விபத்திலோ அல்லது வேறு வகையிலோ உயிர் பிரிய வேண்டு என்று கூறி அவரிடம் சுமார் 21 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார் இதனை அறிந்த முரசொலி மாறன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தன்னை மாந்திரீகம் மூலம் ரமேஷ் கிருஷ்ணா கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பதாக கூறி ரமேஷ் கிருஷ்ணா மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் ரமேஷ் கிருஷ்ணாவை இரு தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மாந்தீரிகவாதியும் போலிசாமியாருமான ரகுவை தேடி வந்துள்ளனர் இந்நிலையில் இன்று ரமேஷ் கிருஷ்ணா மூலம் ரகுவை பெரம்பலூரிற்கு வரவழைத்த போலீசார் போலி சாமியார் ரகுவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவமானது தற்போது பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.