திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் இன்று (மார்ச் 3) பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புதுக்குளம் ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் வார்டு உறுப்பினர் மரிய தங்கம், மகளிர் திட்டம் வேணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.