நெல்லை மாநகரில் நேற்று இரவு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டரணி சார்பில் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டேஷனரி கிட்டுகள் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துலட்சுமி, பிரேமா, அலெக்ஸ், அப்துல் பாசித் உள்ளிட்ட தவெகவினர் பலரும் கலந்து கொண்டனர்.