வீரகளப்பெருஞ்செல்வி கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி;
திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் பஞ்சாயத்து வீரகளப்பெருஞ்செல்வி கிராமத்தில் அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சியை அதிமுக பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் துவங்கி வைத்தார்.இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.