மயிலாடி கூண்டு பாலத்தின் கீழே சாலை சீரமைப்பு பணி

கன்னியாகுமரி;

Update: 2025-03-08 07:00 GMT
குமரி மாவட்டம் வழுக்கன்பாறை -  அஞ்சு கிராமம் நெடுஞ்சாலையில் மயிலாடியை  அடுத்த புன்னார்குளம் அருகில் கூண்டு பாலம் அமைந்துள்ளது. இதன் மேல் பகுதியில் விவசாயத்திற்கான பாசனத்திற்கான கால்வாயும்,  கீழ் பகுதியில் சாலையும்  செல்கிறது. இந்த கூண்டு பாலம் அகலம் குறைவாகவும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அதனை அகலப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்று அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கூண்டு பல அகலப்படுத்தப்பட்டது.       ஆனால் கீழே செல்லும் சாலை பல பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகளை தொடங்கியுள்ளது. இதை அடுத்து தற்போது சாலை பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் சுமார் ஒரு மாத காலம் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Similar News