கோவை: கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்கள் மாநாடு !

மருத்துவ இயற்பியலாளர்கள் மாநாடு கோவையில் கோலாகலம்.;

Update: 2025-03-16 12:28 GMT
மருத்துவத் துறையில் இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி கதிர்வீச்சு சிகிச்சை, கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் இமேஜிங் போன்ற துறைகளில் செயல்படும் மருத்துவ நிபுணர்களான மருத்துவ இயற்பியலாளர்களின் மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் ஆண்டு மாநாடு, கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையின் சார்பில் கோவையில் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட மருத்துவ இயற்பியலாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில், கதிர்வீச்சு சிகிச்சை, இமேஜிங் தொழில்நுட்பங்கள், கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் தர உறுதிப்பாடு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் நல்லா ஜி.பழனிசாமி தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், துணைத் தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி, செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, மாநாட்டு ஏற்பாட்டுத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் டாக்டர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோய் மருத்துவம் மற்றும் சிகிச்சைகளின் வெளிப்பாடுகளை மேம்படுத்துவதில் மருத்துவ இயற்பியலின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது. மாநாடு சிறப்பாக நடைபெற பங்களித்த அனைவருக்கும் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். இந்த மாநாடு மருத்துவ இயற்பியல் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்களை அறிந்துகொள்ளவும், புற்றுநோய் சிகிச்சையில் தரமான மற்றும் பாதுகாப்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் உதவியது. பங்கேற்றனர்.

Similar News