கல்லூரி மாணவர்கள் ட்ரோன் செயல்முறை விளக்கம்

வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் ட்ரோன் செயல்முறை விளக்கம்;

Update: 2025-03-18 08:48 GMT
கல்லூரி மாணவர்கள் ட்ரோன் செயல்முறை விளக்கம்
  • whatsapp icon
கிராமப்புற பணி அனுபவத் திட்ட மூலம் ட்ரோன் தொழில்நுட்பத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் அறிவியல் நிலைய இறுதியாண்டு மாணவர்கள் சூர்யா, சூர்யா, சூர்யா, சுதர்சன், தங்கதுரை, சந்திப் , வீரபாண்டி யோகேஷ்குமார் மற்றும் யோகேஷ் ராம் ஆகிய இறுதி ஆண்டு மாணவர்கள் ட்ரோன் தொழில்நுட்பத்தை பற்றி விவசாயிகளுக்கு விளக்கி காட்டினார்கள். மேலும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் முனைவர் நிர்மலா அவர்கள் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் வட்டாரத்தில் உள்ள தாதாங்கொட்டை,கே புதுக்கோட்டை, சுக்காம்பட்டி போன்ற கிராமங்களில் காய்கறி பயிர்களில் ட்ரோன் மூலம் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு மருந்துகள் தெளிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி செயல் விளக்கத்துடன் விளக்கி கூறினார்கள் பயிர்களுக்கு தெளிக்கும் நேரம் குறைவது உடன் மருந்து தெளிக்க ஆட்களுக்கு கொடுக்கும் ஊதிய செலவவும் குறைகிறது. மேலும் வட்டார வேளாண்மை அலுவலர் திரு.கார்த்திக் அவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.மேலும் சுப்பிரமணி,சரவணக்குமார் ,மற்றும் தம்பி துறை ஆகியோரது விவசாய நிலத்தில் வெங்காயம்,சுரைக்காய்,தக்காளி மற்றும் காய்கறி பயிர்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு செயல்விளக்கம் செய்து காட்டினார்கள்.

Similar News