பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொம்மிடி அருகே மெனசியில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-18 08:49 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மெனசி, பூதநத்தம், குண்டலமடு கிளைகள் சார்பில் இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது பசும்பால் லிட்டருக்கு 45 ரூபாயாக உயத்தவும், கால்நடை தீவனம் 50% மானியத்தில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.உடன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தமிழ்நாடு மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Similar News