கார் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலி
கார் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலி;

விட்டல் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) விவசாயி. இவர் நேற்று மாலை தம்மனம்பட்டி அருகே நான்கு வழி சாலையை மொபெட்டில் கடக்க முற்பட்ட பொழுது திண்டுக்கல் கரூர் தேசிய நான்கு வழிச்சாலையில் சிவகங்கையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி கிருஷ்ணகிரியை சேர்ந்த தாமரைச்செல்வன் அரசு டாக்டர் (37) தனது ஊருக்கு செல்வதற்காக தானே ஓட்டி சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். கார் நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மொபெட் சென்டர் மீடியனில் தூக்கி வீசப்பட்டது. இதில் டாக்டர் காயம் இன்றி தப்பினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அணு ஆம்புலன்ஸ் டிரைவர் சபரி மூலம் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.