முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது.;
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை வேளையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று (மார்ச் .18) நண்பகல் 12.50 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த கல்யாணத்திற்கு மதுரையிலிருந்து மீனாட்சி மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோவிலுக்கு வந்திருந்தனர். திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். கோவிலில் பெண்கள் புதிதாக தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு 800க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.