தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கருங்கல் கிளை கூட்டம் கருங்கல் தமிழ் சங்க அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் குமரி மு.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஓலக்கோடு ஜான் அறிக்கை வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஏ சாந்தகுமார் மறைந்த எழுத்தாளர்கள் நந்தலாலா மற்றும் நாறும்பூநாதன் ஆகியோர் பற்றி எடுத்துரைத்தார். பின்னர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அண்மையில் தமிழக அரசின் தமிழ் செம்மல் விருதுப் பெற்றுள்ள உறுப்பினர் எழுத்தாளர் கப்பியறை இராயப்பனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். கூட்டத்தில் பனிப்ரோன், ராஜா, அல்போன்ஸ் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஜான் சுஜன்லால் நன்றி கூறினார்.