மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம்
மதுரை மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் உற்சாகத்துடன் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் திருவாதவூர் முடக்கு சாலை முதல் மதுரை சாலை வரை நடைபெற்றது. நேற்று 18ஆம் தேதி மாலை நடுமாடு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 15 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. டி. புதுப்பட்டி சின்னச்சாமி அம்பலம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் முதல் பரிசும், வெள்ளியங்குன்றம் பாலா நாவினிப்பட்டி வழக்கறிஞர் பொன் ராஜேந்திரன் இரண்டாம் பரிசும், திருவாதவூர் தன்வந்த பிரசாத், வெள்ளரிப்பட்டி அழகு மூன்றாம் பரிசும், தேனி பாலார்பட்டி சின்ன மாயத்தேவர் நான்காம் பரிசு பெற்றனர். பெரிய மாட்டு வண்டியில் 8 வண்டிகள் கலந்து கொண்டன. திருவாதவூர் தன்வந்த் பிரசாத் முதல் பரிசும், ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன் இரண்டாம் பரிசும், திருவாதவூர் எஸ்.எம் பிரதர்ஸ் பதினெட்டான் அம்பலம் மூன்றாம் பரிசும், கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி சுண்ணாம்பூர் வீரணன் அம்பலம் நான்காம் பரிசு பெற்றனர். சிறிய மாட்டில் 31 ஜோடிகள் கலந்து கொண்டன. முதல் சுற்றில் 16 ஜோடிகள் கலந்து கொண்டன. தேனி சின்னமனூர் சுகன்யா, அ. வல்லாளப்பட்டி இளந்தேவன் முதல் பரிசும், தேனி முத்தாலபுரம் சரவணன் வேல், தெய்வம் இரண்டாம் பரிசும், மதுரை பாண்டி கோவில் பாண்டியராஜன், கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி மூன்றாம் பரிசும், சிவகங்கை கிளாதிரி முனிச்சாமி, மேலூர் அழகன் கெளசிக் நான்காம் பரிசு பெற்றனர். இரண்டாம் சுற்று பிரிவில் 15 வண்டிகள் கலந்து கொண்டன. புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் சிவபாலன் மேலூர் சிக்கி பாய்ஸ் முதல் பரிசும், திருவாதவூர் எஸ்.எம்.பிரதர்ஸ், சத்திரப்பட்டி ஜெயபாலகிருஷ்ணன் இரண்டாம் பரிசும், கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி, சத்திரப்பட்டி முத்துக்கிருஷ்ணன் கோனார் மூன்றாம் பரிசும், பழையூர் அழகர் சரவணன் நான்காம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகையும் வெற்றி கோப்பையும் விழா குழுவினர் வழங்கினர். மாட்டுவண்டி பந்தயத்தை காண கொட்டகுடி, திருவாதவூர், பனங்காடி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, ஆமூர், இடையபட்டி, தெற்குதெரு, மேலூர் ஆகிய பகுதியிலிருந்து வந்திருந்த மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் ரோட்டில் இருபுறம் நின்று ஆரவாரம் செய்து கண்டுகளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருவாதவூர் கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்