சாலை மறியலில் ஈடுபட்ட காவலர் உறவினர்கள்
மதுரையில் காவலரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

மதுரை பெருங்குடி அருகே நேற்று (மார்ச் .18) மதியம் பாதி எரிந்து மர்மமான முறையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இந்த ஆண் சடலம் இளையான்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மலையரசன் (36) என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.இந்நிலையில் இன்று (மார்ச் .19) மதியம் மலையரசனின் உறவினர்கள் காவலரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.