ராசிபுரத்தில் அகில இந்திய மோட்டார் வாகன மக்கள் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் தமிழகத்தில் முடிவு பெற்ற டோல்கேட்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை...
ராசிபுரத்தில் அகில இந்திய மோட்டார் வாகன மக்கள் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் தமிழகத்தில் முடிவு பெற்ற டோல்கேட்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை...;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளுர்கேட் பகுதியில் உள்ள காசி விநாயகர் கோயிலில் அகில இந்திய மோட்டார் வாகன கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் கோயம்புத்தூர், சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100.க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி,கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் ராஜா பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் சொந்த வாகனங்களை வைத்து கள்ளத்தனமாக வாடகைக்கு இயக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக மேக்சி கேப் வாகனங்களுக்கு 12+1 இருக்கைகள் மட்டுமே அனுமதி உள்ளது. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு இருக்கைகளின் அளவை அதிகரிக்க வேண்டும். 2000 ரூபாய் மாதம் செலுத்தினால் குளிர்சாதன வசதி உட்பட உள்ள அனைத்து பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அமைச்சர் கூறிய நிலையில் ஏற்கனவே மோட்டார் வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. 30 லட்சம் மோட்டார் சொந்தங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளனர் அமைச்சர் அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக முழுவதும் முடிவு பெற்ற டோல்கேட்களை அகற்றப்படாமல் உள்ளது.மத்திய,மாநில அரசுகள் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் அபராதம் தொடர்ந்து காவல்துறை மூலமாகவும் போக்குவரத்து துறை மூலமாகவும் ரூ.10,000 அளவிற்கு கூட அபராதம் விதிகின்றனர். இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டத்தில் மாநில பொருளாளர் யுவராஜா முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்