மேலூரில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர்
மதுரை மேலூர் நகரில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.;
மேலூர் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் விற்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேலூர் நகராட்சி ஆணையாளர் பூ. பாரத் அவர்களின் உத்தரவின் பேரில் மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மேலூர் நகராட்சி சுகாதர ஆய்வாளர் தினேஷ் குமார் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பலசரக்கு கடைகளில் இன்று (மார்ச்.19) ஆய்வு செய்து 200 கிலோ பிளாஸ்டிக் பைகள், பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 18,000 அபதாரம் விதித்தனர். தொடர்ந்து மேலூர் பகுதிகளில் இது போன்ற சோதனைகள் தொடரும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.