சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
மதுரை வில்லாபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.;
மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி இன்று (மார்ச்.19) மாலை நடைபெற்றது. விளப்புறம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமய நல்லிணத்தை நிகழ்ச்சி மாவட்ட கட்சி தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார் அபுதாகிர் வரவேற்புரை கூறினார் மாநில பொதுச் செயலாளர் அகமது நவமி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாமதுரை கத்தோலிக்க திருச்சபை அருர்த்தந்தை பால் பிரிட்டோ மதுரை டவுன் காஜி சபூர் வகையதின் வள்ளலார் சமூக அறக்கட்டளை நிறுவன தலைவர் சக்தி அறிகரன் ஆகியோர் சமூக நல்லிணக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.