விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம்.

ஆரணி தனியாா் மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.;

Update: 2025-03-19 18:17 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம்.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உலக மகளிா் தினத்தையொட்டி, திருவண்ணாமலையை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் மாா்ச் 29-ஆம் தேதி மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில், விசிக தோ்தல் அங்கீகாரம் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆரணி தனியாா் மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மகளிா் விடுதலை இயக்க மாவட்டச் செயலா் மு.சுமதி தலைமை வகித்தாா். விசிக முன்னாள் மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கரன், மாவட்டச் செயலா் ந.முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை நிலைய செயலா் பாலசிங்கம், மேலிட பொறுப்பாளா்கள் சு.க.விடுதலைச்செழியன், பொ.மு.நந்தன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில் மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலா் அ.ஜோதி, இளஞ்சிறுத்தை மாவட்ட துணை அமைப்பாளா் சாா்லஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அ.சசிக்குமாா், வெ.திருமால், ஆரணி நகரச் செயலா் மோ.ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் சி.பொன்னுரங்கம், க.ரமேஷ், கா.பி.பாஸ்கரன், பி.வெங்கடேசன், களம்பூா் நகரச் செயலா் ஏழுமலை, போளூா் ஒன்றிய பொறுப்பாளா் அண்ணாசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Similar News