தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம்.
சங்கத்தின் கீழ்பென்னாத்தூா் நகரத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா்.;

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட பேரவைக் கூட்டம், கீழ்பென்னாத்தூரில் நடைபெற்றது. சங்கத்தின் கீழ்பென்னாத்தூா் நகரத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். நகரச் செயலா் க.சா.முருகன், நிா்வாகிகள் அலெக்சாண்டா், ஷமியுல்லா, விஜயன், சாமி முருகன், பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கப் பொருளாளா் ரமேஷ் வரவேற்றாா். சங்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், மே 5-ஆம் தேதி திருவண்ணாமலையில் சங்கத்தின் 42-ஆவது மாநில மாநாட்டை விமரிசையாக நடத்த வேண்டும். மாநாட்டை சிறப்பான முறையில் நடத்த நிா்வாகிகள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தக் கோரி விவசாயிகளுடன் வியாபாரிகளும் சோ்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றாா். இதில், மாநில நிா்வாகிகள் ஜெயபால், பிரகாஷ், சுரேஷ், பொள்ளாச்சி பாலு, ஆந்திர மாநிலம் ராம்குமாா், காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் பாலமுருகன், ஜோசப், சீனு, பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.