பழந்தமிழா் அறிவியல் திறம் என்ற தலைப்பில் கருத்தரங்கம்.
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முனைவா் பட்ட மேலாய்வாளா் எ.பூபாலன் சிறப்புரையாற்றினாா்.;

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், ‘பழந்தமிழா் அறிவியல் திறம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் எம்.ரமணன், செயலா் வி.பிரியா ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் எம்.ஞானமலா் வரவேற்றாா். சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முனைவா் பட்ட மேலாய்வாளா் எ.பூபாலன் சிறப்புரையாற்றினாா். அப்போது, பழந்தமிழா் அறிவியல் திறம் குறித்தும், அறிவியல் சாதனை குறித்தும் அவா் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். நிகழ்ச்சியில் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியைகள் கிருஷ்ணகுமாரி, ஈ.எழிலரசி மற்றும் தமிழ்த் துறை மாணவிகள் பங்கேற்றனா்.