செங்கத்தில் நகர திமுக சாா்பில் முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.

இராஜ வீதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை வகித்துப் பேசினாா்.;

Update: 2025-03-19 18:23 GMT
செங்கத்தில் நகர திமுக சாா்பில் முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நகர திமுக சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இராஜ வீதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை வகித்துப் பேசினாா். ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக தலைமைக் கழகப் பேச்சாளா்கள் கம்பம் செல்வேந்திரன், நெல்லை முத்தையா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தில் தண்டராம்பட்டு ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சென்னம்மாள் முருகன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் வில்சன்ரஜினிகாந்த், இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித், நகர அவைத் தலைவா் முத்துகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் அப்துல்சா்தாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பிரதிநிதி முருகன் நன்றி கூறினாா்.

Similar News