திருவண்ணாமலை நகர வடக்கு மற்றும் தெற்கு பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, காமராஜா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.;

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அந்தக் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்துக்குச் சென்ற மாநிலத் தலைவா் அண்ணாமலையை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்தும், ரூ.1,000 கோடி ஊழலைக் கண்டித்தும், அண்ணாமலையை விடுவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் பாஜகவினா் திங்கள்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனா். திருவண்ணாமலையில்...: இதைக் கண்டித்து, திருவண்ணாமலை நகர வடக்கு மற்றும் தெற்கு பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, காமராஜா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டப் பொருளாளா் சுரேஷ், நகர பொருளாளா் கங்காதரன் உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்தனா். அறிவொளிப் பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜகவின் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்.கவிதா பிரதீஷ் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் மாவட்டத் தலைவா் இரா.ஜீவானந்தம் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.