ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தர்மபுரி ஒகேனக்கல்லில் 2000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு இங்க தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் மேலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவைப் பொறுத்து காவிரி ஆற்றில் நீரின் அளவு அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. கடந்த இரு தினங்களாக 1500 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழை காரணமாக மார்ச் 21 இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 2000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.