ஊத்தங்கரை: இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.
ஊத்தங்கரை:இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மூன்றாம்பட்டி ஊராட்சி, கேத்துநாயக்கன்பட்டி இலங்கை வாழ் தமிழர் முகாமில், மதிப்பில் ரூ. 8 கோடியே 52 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 148 இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி உள்ளிட்ட பலர் உள்ளனர்.