லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கும்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சொத்து மதிப்பு சான்றிதழ் பெற ரூ15,000 பெற்ற பெண் கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்;

Update: 2025-03-23 06:24 GMT
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கும்
  • whatsapp icon
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர். இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் பெற அய்யம்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த சான்றிதழை வழங்குவதற்கு அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி ரேவதி ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க ரேவதி விருப்பம் இல்லாத கதிர் இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் ரசாயனப் பொடி தடவிய 15 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கதிரிடம் கொடுத்து அனுப்பினார்கள். அவர் கிராம நிர்வாக அதிகாரியிடம் நேற்று முன்தினம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அதிகாரி ரேவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரித்து, லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அதிகாரி ரேவதியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் ஆர்.டி.ஓ.மோகனசுந்தரம் நேற்று உத்தர விட்டார்.

Similar News