அய்யலூர் அருகே கார் மோதி பெண் பலி

அய்யலூர் அருகே கார் மோதி பெண் பலி;

Update: 2025-03-25 15:17 GMT
அய்யலூர் அருகே கார் மோதி பெண் பலி
  • whatsapp icon
கள்ளக்குறிச்சி மாவட்டம் வேலாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று தனது மனைவி சந்தியா தாய் மல்லிகா மற்றும் குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு ஒரு காரில் சென்றார். திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது தீத்தாகிழவனூரை சேர்ந்த சரஸ்வதி(வயது 50) என்பவர் சாலையோரம் தனது தோட்டத்திற்கு  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் சரஸ்வதி மீது பயங்கரமாக மோதி சாலையோர 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசியது. அதன் பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த சென்ற மீடியன் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் வந்தவர்கள் காயங்களின்றி உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சென்டர் மீடியன் மீது ஏறி நின்ற காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News