மாணவி தற்கொலை காவலர்கள் விசாரணை

மகேந்திரமங்கலம் அருகே 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை காவலர்கள் வழக்குப்பதிவு விசாரணை;

Update: 2025-03-26 02:20 GMT
மாணவி தற்கொலை காவலர்கள் விசாரணை
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஹேந்திரமங்கலம் அடுத்த மல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருடைய இளையமகள் இளமதி இவர் அரசுப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றார் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று மாணவி வீட்டை விட்டு வெளியேறிய அருகாமையில் உள்ள மாந்தோப்பில் நீண்ட நேரம் அவரை காணவில்லை. இதனை அடுத்து மாணவியை குடும்பத்தினர் தேடிய போது வீட்டுக்கு அருகாமையில் உள்ள முனுசாமி என்பவருக்கு சொந்தமான தோப்பில் தூக்கில் பிணமாக இருந்துள்ளார் இதைக் கண்டு பெற்றோர் கதறி அழுத நிலையில். மகேந்திரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவலர்கள் நேற்று வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Similar News