
அளப்பச்சாகவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை ராஜாமணி வரவேற்றார். விழாவில் மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன், சுந்தர்ராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார், முன்னாள் பொத்தியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சந்திரசேகர், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.