வேகத்தடை மற்றும் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டி வாகன ஓட்டுகள் எதிர்பார்ப்பு
வேகத்தடை மற்றும் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுகள் எதிர்பார்கின்றனர்.;

செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் பகுதியில் முதுகரை- கூவத்துார் செல்லும் நெடுஞ்சாலையும் , படாளம்-செய்யூர் செல்லும் நெடுஞ்சாலை சந்திக்கும் சந்திப்பு உள்ளது.தினமும் இந்த சாலை சந்திப்பில் இருசக்கர வாகனம், கார்,பேருந்து மற்றும் லாரி என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் கூவத்துாரில் இருந்து வரும் வாகனங்கள் படாளம் செல்லும் சாலையில் திரும்பும் போதும், முதுகரையிலிருந்து வரும் வாகனங்கள் செய்யூர் சாலையில் வேகமாக திரும்பும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலை சந்திப்பில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஆகையால் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க வேகத்தடை மற்றும் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுகள் எதிர்பார்கின்றனர்.