கெலமங்கலம்: தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய ஆட்சியர்.
கெலமங்கலம்: தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய ஆட்சியர்.;

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற கருப்பொருளுடன், பெண்மையை போற்றும் பெருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 27.03.2025 துவக்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) கவிதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாசினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.