வேலாயுதம்பாளையத்தில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென பற்றி எரிந்த தீயால் பரபரப்பு.
வேலாயுதம்பாளையத்தில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென பற்றி எரிந்த தீயால் பரபரப்பு.;
வேலாயுதம்பாளையத்தில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென பற்றி எரிந்த தீயால் பரபரப்பு. புகலூர் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஏராளமான செடி கொடிகளும் மரங்களும் முளைத்து காய்ந்த நிலையில் புதர்களாக இருந்தது. தற்போது வெயில் அதிகம் அடித்து வருவதால் இவை மேலும் சருகாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து அருகில் இருந்த மரங்களிலும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆயினும் முடியவில்லை. உடனே தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் புகலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற இந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.