வெற்றி பயணத்தில் சக்தி மசாலா,குவியும் விருதுகள்.
பிரபல முன்னணி நிறுவனமான சக்தி மசாலா நிறுவனம் ஜம்னலால் பஜாஜ் தேசிய விருதை பெற்றுள்ளது.;

மும்பையில் உள்ள நியாயமான வணிக நடைமுறைகள் கவுன்சில் ((FBP) அமைப்பு நடத்திய விழாவில், 2024-25 ஆம் ஆண்டுக்கான ஜம்னலால் பஜாஜ் தேசிய விருது சக்தி மசாலா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை விருதை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் ரவிகாந்த் வழங்க அதனை சக்தி மசாலா நிறுவனர்கள் டாக்டர். பி.சி.துரைசாமி, டாக்டர். சாந்தி துரைசாமி மற்றும் செல்வன் செங்கதிர்வேலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.இந்த விருது தேசிய அளவில் நியாயமான, நேர்மைமான வணிக நடைமுறைகளை கடைப்பிடித்தமைக்காக தயாரிப்பு நிறுவனங்கள் - பெரிய தொழிற்சாலை பிரிவு வகையில் சக்தி மசாலா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இது அந்நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றி மற்றும் அதன் அசைக்க முடியாத மதப்புகளையும் உயர்தர தயாரிப்புகளையும், மக்களுக்கான சேவைகளையும் வழங்கும் ஆர்வத்தை காட்டுகிறது. மேலும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் உறுதியான வாடிக்கையாளர் அடித்தளம் ஆகியவை மூலம், சக்திமசாலா நம்பகமான பிராண்ட் என்ற புகழை பெற்றுள்ளது. வணிக சாதனைகளுக்கு அப்பால், சக்திமசாலா சமூகத்திற்குத் அதன் தொண்டு நிறுவனமான சக்தி தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதன்படி, சக்தி மருத்துவமனை மூலம் மருத்துவசேவை, சக்தி பள்ளி மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் பராமரிப்பை வழங்குதல், சக்கி மறுவாழ்வுமையம் மூலம் மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமான வாழ்க்கையை நடத்த வழிவகுத்தல், வாழி காட்டி கல்வி உதவித் திட்டம் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கான ஆதரவை வழங்குவதன் மூலம் எதிர்கால சந்ததியினரை வளர்ப்பது, தளிர் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் மரம் நடுவது, ஜீவன் திட்டம் மூலம் அடிப்படை வாழ்க்கை ,ஆதரவு பயிற்சி திட்டங்களை வழங்குவது, விருட்சம் திட்டம் மூலம் பொருளாதார ரீதியாக பலவீனமான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவது போன்ற சேவைகளை சக்தி மசாலா நிறுவனம் செய்து வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பெருமையுடனும் கண்ணியத்துடனும் வாழ உதவும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. சக்திமசாலாவின் இந்த திட்டங்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னலமற்ற முயற்சிகள் பலரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.