கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது;
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரூபேஷ் மஹத் (வயது 28). இவர் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் நூற்பாலை பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்தார். இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க போலீசார் ரூபேஷ் மஹத்தை கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு போலீஸ் சூப்ப்ஆரண்டு பரிந்துரை செய்தார். அதன்படி ரூபேஷ் மஹத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தர விட்டார். அதன்படி ரூபேஷ் மஹத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு கோவை சிறையில் இருக்கும் அவரிடம் வழங்கப்பட்டது.