கோவில்பட்டியில் ஓய்வூதியர் நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்!

மூத்த குடி மக்களுக்கு ரயில் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-29 13:00 GMT
கோவில்பட்டியில் ஓய்வூதியர் நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்!
  • whatsapp icon
குறைந்தபட்ச ஓய்வூதியம் 9000 அகவிலைப்படியுடன் இணைத்து வழங்க வேண்டும், மத்திய அரசு நியமித்த குழுவின் பரிந்துரைப்படி இடைக்கால நிவாரணம் ரூ 3000 உடனடியாக வழங்க வேண்டும். ESI மருத்துவ வசதி, மூத்த குடி மக்களுக்கான ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவில்பட்டியில் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக பயணியர் விடுதி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர்கள் நலச்சங்க தலைவர் கே. ராமசுப்பு தலைமை வகித்தார். R.ராஜசேகரன்( ஐ என் டி யூ சி), R.கிருஷ்ணவேணி (சிஐடியு), K. செந்தில் ஆறுமுகம் (ஏ ஐ டி யு சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி யூ.சி சார்பாக பி.எஸ்.என்.எல் துரைராஜ், பழனிச்சாமி, முருகன், செல்லப்பா, மகேந்திரன், லாயல் மில் ஐஎன்டியுசி S. ராஜபாண்டியன், என் எல் ஓ தலைவர் A. ரகுபதி, மக்கள் மேம்பாட்டு இயக்க தலைவர் எம். பொன்னுச்சாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் பேரையா, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நல சங்கம் அய்யாப்பிள்ளை, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயலாளர் தெய்வேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், லட்சுமி மில் ஐஎன்டியுசி செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News