அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்.

செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆனந்தன் வரவேற்றாா்.;

Update: 2025-03-30 08:07 GMT
அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்.
  • whatsapp icon
அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆனந்தன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலா் துரைசெந்தில் கலந்துகொண்டு பேசுகையில், திமுக ஆட்சியின் அவலங்களை அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், அணி அமைப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட மாணவரணி நிா்வாகி பழனிச்சாமி நன்றி கூறினாா்.

Similar News