அணைப்பாளையம் புதூர் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. எம்எல்ஏ பங்கேற்பு.
அணைப்பாளையம் புதூர் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. எம்எல்ஏ பங்கேற்பு.;
அணைப்பாளையம் புதூர் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. எம்எல்ஏ பங்கேற்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பி. அணைப்பாளையம் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ தன்வந்தரி பெருமாள், ஸ்ரீ பிரம்மா,ஸ்ரீ கன்னிவிநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பெரிய காட்டு கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ விநாயகர் வழிபாடு, புண்யாகம், இரண்டாம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி யாத்திராதானம், கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தார். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.