பர்கூர்:பக்தர்கள் மீது பூசாரி நடந்து வினோத வழிபாடு.
பர்கூர்: பக்தர்கள் மீது பூசாரி நடந்து வினோத வழிபாடு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு 2-ம் நாளான நேற்று முத்துமாரியம்மன் சாமி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கரகத்தை கோவில் பூசாரி எடுத்து ஊர்வலமாக சென்றார். அப்போது ஆண், பெண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறை வேற்ற காளிக்கோவில் அருகில் சாலையில் ஈரத்துணியுடன் படுத்திருந்தத பக்தர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்றார். தொடர்ந்து கோவில் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கினர். பக்தர்கள் மீது பூசாரி சாட்டையால் அடித்தார். இந்த விழாவில் விழாவையொட்டி ஆடு, கோழிகளை பலி இட்டு சமைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்து அளித்தனர்.