ஓசூர்:கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

ஓசூர்:கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-04-01 13:30 GMT
ஓசூர்:கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு.
  • whatsapp icon
ஓசூர்:கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள ஏ.செட்டிப்பள்ளி கிரா மத்தை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (50). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஏ.செட்டிப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடை யில் மது அருந்திவிட்டு, அந்த பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அலசபள்ளி பகுதியில் வழியாக சென்ற கார் வெங்கடாசலபதி மீது வேகமாக மோதியது இந்த விபத்தில், அவர் படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வந்த பேரிகை போலீசார் அவரை மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி வெங்கடாசலபதி உயிரிழந்தார்.

Similar News