தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-04 12:48 GMT
நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்ட தொடரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இரவோடு இரவாக அமலுக்கு கொண்டு வந்தது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக, தமிழக வெற்றிக் கழகம், முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று மாலை 3 மணியளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமையில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, நகர ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், என 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News