மும்மொழி கொள்கை: பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்.
வெங்கரையில் மும்மொழி கொள்கை பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்.;
பரமத்திவேலூர், ஏப் 6 வெங்கரை பேரூராட்சி யில் மத்திய அரசின் மும் மொழி கல்வி கொள் கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி கபிலர் மலை ஒன்றிய செயலாளர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியி ல் மாவட்ட செயலாளர் பத்மராஜா, மாவட்ட துணைத் தலைவர் பி. சி. வடிவேல், மாவட்ட பொதுச் செயலாளர் வி.எம்.சுபாஷ், கபிலர் மலை தெற்கு ஒன்றிய தலைவர் எம். வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகளிர் அணியினர் தகுதி,தனலட்சுமி, ஒன்றிய மற்றும் நிர்வாகிகள் கெளசிகன், நவலடி, பொன்னையன், ஆனந்தகுமார், ராஜ், கிருஷ்ணகுமார், கருணா நிதி, சக்திவேல், சிவக்குமார், முத்துசாமி மற்றும் கிளைத் நிர்வாகிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.