பரமத்தி வேலூரில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்.
பரமத்தி வேலூரில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.;

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் பரமத்திவேலூர், ஏப்.6- பரமத்திவேலூர் மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறைகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பரமத்திவேலூர் மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் வரதராஜன் தலைமை வகித்தார். முகாமில் எஸ். வாழவந்தி, நல்லூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், வில்லிபாளையம், சோழசிராமணி மற்றும் பரமத்திவேலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின் கட்டணம், பழுதடைந்த மின் அளவிகள், பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் குறைந்த மின் அழுத்தம் தொடர்பான புகார்கள் ஆகியவை குறித்த கோரிக்கை மனுக்களை' செயற்பொறியாளர் வரதராஜனிடம் வழங்கினர். கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முகாமில் உதவி செயற் பொறியாளர்கள் ராஜா, சண்முக சுந்தரம், மாலதி, சரவணன் மற்றும் கோட்ட உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.