நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி பாரதியார் நகர் கிளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.அதில் பெரியார் நகர் வரை வந்து செல்லும் அரசு பேருந்து 5c யை பாரதியார் நகர் வரை நீட்டி தர வேண்டி கூறியிருந்தனர். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி செயலாளர் பாயாஸ், இணை செயலாளர் முனவர் ஆகியோர் உடன் இருந்தனர்.