புத்தகம் வழங்கி மாற்றுத்திறனாளி மாணவியை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று (ஏப்ரல் 8) மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி மாணவி செல்வி இந்திராவின் கோரிக்கையை உடனடியாக ஏற்று போட்டி தேர்வுக்கான புத்தகங்களை வழங்கி போட்டி தேர்வில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிகழ்வின்பொழுது அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலெக்டரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.