கருத்தடை செய்யும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மாட்டுச்சந்தை அருகில் கால்நடைகளுக்கான கருத்தடை செய்யும் மையம் உள்ளது. இந்த மையத்தை இன்று (ஏப்ரல் 8) மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொழுது மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.