கஞ்சாவுடன் இருவர் அதிரடியாக கைது
மதுரை உசிலம்பட்டி அருகே கஞ்சாவுடன் இருவரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கீரிப்பட்டி அருகே பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் உசிலம்பட்டி தாலுகா ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ராணி(50) வீரபத்திரன் (24) ஆகிய இருவரை கைது செய்தார் . கைது செய்த நபர்களிடமிருந்து கஞ்சா ஒரு கிலோ 500 கிராம், பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.