தமிழக அமைச்சருக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.
மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் இன்று( ஏப்.9) மாலை தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை நையாண்டியாக பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாற்றுத்திறனாளிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.