கந்தம்பாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழா.
கந்தம்பாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.;

பரமத்தி வேலூர்,ஏப்.9: நாமக்கல் மாவட்டம் நல்லூரில் சுயம்புமாரியம்மன்காளியம்மன், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்கள் அருகருகே உள் ளன. சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி பூச்சாட்டுதல்,கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை கோவிலின் முன்புறம் உள்ள பூக்குழி இறங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப் போது கோவில் பூசாரி முதலில் பூக்குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து ஆண், பெண் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கந்தம்பாளையம், நல்லூர், பெருமாபட்டி, கவுண்டி பாளையம், காளியப்பனூர், முசல்நாய்க்கன்பாளையம், செல் லப்பம்பாளையம், வாழ் நாயக் கன்பாளையம், ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட் டினை கோவில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.