பாஜகவின் தெருமுனை பிரச்சாரம் கூட்டம்
மதுரை உசிலம்பட்டி பகுதியில் நேற்று பாஜகவின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபம் மற்றும் முருகன் கோவில் முன்பு பாஜக துவங்கப்பட்ட தினம் மற்றும் மும்மொழி கொள்கை, மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை கூட்டம் நேற்று ( ஏப்.9)மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கதலி நரசிங்க பெருமாள், உசிலம்பட்டி நகரில் தேசிய தலைவர் நேதாஜி சுபாசு சந்திரபோஸ் சிலை அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனை மேம்படுத்த வேண்டும், கண்மாய் சீர்படுத்தப்பட்டு நல்ல நீர்த்தேக்க நிலையாக சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும், உசிலம்பட்டி நகரம் சுகாதாரமான நகரமாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது., மும்மொழி கல்வி கொள்கையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்தி திணிக்கப்படுவதாக ஒரு பொய்யான ஒரு குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்கிறார்.ஆனால் எந்த இடத்திலும் மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயமாக்கப்படவில்லை, மூன்றாவது மொழி என்பது தெலுங்காக இருக்கலாம், மளையாளமாக இருக்கலாம், கன்னடமாக இருக்கலாம் எந்த ஒரு இந்திய மொழியாகவும் இருக்கலாம் அந்த வரிசையில் இந்தி-யாகவும் இருக்கலாம் அல்லது அந்நிய மொழியாக உலக மொழியாகவும் இருக்கலாம்.இந்தி தான் என சொல்லவில்லை, இதை நமது முதல்வர் நிரூபித்தார் என்றால் நாங்கள் அவருக்கு 1 கோடி பரிசாக வழங்க தயார் என்று சொல்லியிருக்கிறோம் என்றார்.